Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சீன பொருளாதாரம் கடும் சரிவு

சீன பொருளாதாரம் கடும் சரிவு

இது 2-ம் காலாண்டில் 7.9 சதவீதமாக இருந்தது.

👤 Sivasankaran19 Oct 2021 7:09 AM GMT
சீன பொருளாதாரம் கடும் சரிவு
Share Post

தற்போது ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு, நிலக்கரி பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் சீனாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3-ம் காலாண்டில் வெறும் 4.9 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது 2-ம் காலாண்டில் 7.9 சதவீதமாக இருந்தது.

முதலாம் காலாண்டில் 18.3 சதவீதமாக இருந்தது. 3-ம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய காலாண்டை விட 5 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது முந்தைய காலாண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.