ஆல்பர்ட்டா சுகாதாரச் சேவையின் கட்டாயத் தடுப்பூசிக் கொள்கைக்குப் பரந்த ஆதரவு கிட்டியுள்ளது: மருத்துவர் வெர்னா யியு
மருத்துவ நிலைகளில் 31 பணியாளர்கள் இதில் அடங்குவர்; அவர்களில் 11 பேர் பதிவுசெய்யப்பட்ட செவிலியர்கள்.

ஆல்பர்ட்டா சுகாதாரச் சேவையில் உள்ள 92 சதவிகித ஊழியர்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கொள்கையின் கீழ் இரண்டு குப்பிக் கோவிட் -19 தடுப்பூசிகளை வைத்திருந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளனர்.
ஏழு சதவிகித ஊழியர்கள் இன்னும் தடுப்பூசி சான்றை சமர்ப்பிக்கவில்லை, ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் - சுமார் 1,200 ஊழியர்கள் - மருத்துவ அல்லது மத அடிப்படையில் விலக்கு ஏற்பாடு கோரியுள்ளனர் என்று ஆல்பர்ட்டா சுகாதாரச் சேவையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மருத்துவர் வெர்னா யியு செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
குறிப்பாக தடுப்பூசி கொள்கை காரணமாக 61 ஊழியர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக மருத்துவர் வெர்னா யியு கூறினார். மருத்துவ நிலைகளில் 31 பணியாளர்கள் இதில் அடங்குவர்; அவர்களில் 11 பேர் பதிவுசெய்யப்பட்ட செவிலியர்கள்.
"ஒட்டுமொத்தமாக இது கட்டாயத் தடுப்பூசிக் கொள்கைக்கு மிகவும் பரந்த ஆதரவு இருப்பதாக நமக்கு சொல்கிறது," என்று அவர் எண்ணிக்கை குறைத்துக் கூறினார்.