Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஏலத்திற்கு வரும் உலகின் முதல் அஞ்சல் தலை

ஏலத்திற்கு வரும் உலகின் முதல் அஞ்சல் தலை

இது சுமார் 5.50 மில்லியன் முதல் 8.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் கேட்கப்படலாம்

👤 Sivasankaran29 Oct 2021 2:29 PM GMT
ஏலத்திற்கு வரும் உலகின் முதல் அஞ்சல் தலை
Share Post

உலகில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் அஞ்சல் தலை தற்போது ஏலத்திற்கு வர உள்ளது. 'பென்னி பிளாக்' என்று அழைக்கப்படும் அந்த அஞ்சல் தலையில் இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் தலையானது 1840 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் தலை வரும் டிசம்பர் 7 ஆம் தேதி ஏலத்திற்கு விடப்படும் என்றும், இது சுமார் 5.50 மில்லியன் முதல் 8.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் கேட்கப்படலாம் என எதிர்பார்ப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.