Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » பம்லப்பிட்டி பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல்

பம்லப்பிட்டி பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல்

ஹுசேமா அப்பாஸ் கென்போய் என்ற மனிதர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

👤 Sivasankaran11 Nov 2021 2:45 PM GMT
பம்லப்பிட்டி பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல்
Share Post

பம்லப்பிட்டி போரா பள்ளிவாசல் மீது பெற்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக மனிதரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷிலினி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தில் பம்பலப்பிட்டி, அதிமலே வீதியை சேர்ந்த ஹுசேமா அப்பாஸ் கென்போய் என்ற மனிதர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக மனிதரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.