ஜப்பானில் தானாக இயங்கும் புல்லட் ரெயிலின் சோதனை ஓட்டம் வெற்றி
12 ரெயில் பெட்டிகளுடன் மணிக்கு 62 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்பட்டது.
👤 Sivasankaran18 Nov 2021 2:06 PM GMT

ஜப்பானில் டிரைவர் இல்லாமால் தானாக இயங்கும் அதிக வேக புல்லட் ரெயிலான 'ஷிங்கன்சென்' ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
12 ரெயில் பெட்டிகளுடன் மணிக்கு 62 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில் இயக்கப்பட்டது.
ரெயில் தானாக இயங்கினாலும், தவறுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் ரெயிலில் இருந்தனர்.
நீகட்டா ஸ்டேஷனில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர்கள் ஓடி, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தை நெருங்கிய பிறகு, ரயில் நீகட்டா ஷிங்கன்சென் ரயில் டிப்போவில் நிறுத்தப்பட்டது
புல்லட் ரெயிலின் சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக ஜப்பான் அரசு தெரிவித்தது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire