Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மண்சரிவில் சிக்கிச் சிறுமியின் பெற்றோர் மற்றும் ரக்பி வீரர் பலி

மண்சரிவில் சிக்கிச் சிறுமியின் பெற்றோர் மற்றும் ரக்பி வீரர் பலி

நெடுஞ்சாலை 99 இல் மண் சரிவில் அவர்கள் சிக்கி உயிரிழந்தனர்.

👤 Sivasankaran23 Nov 2021 3:28 PM GMT
மண்சரிவில் சிக்கிச் சிறுமியின் பெற்றோர் மற்றும் ரக்பி வீரர் பலி
Share Post

கடந்த வாரம் பிரிட்டிஷ் கொலம்பியா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களில் 2 வயது சிறுமியின் பெற்றோர் மற்றும் கல்கரியைச் சேர்ந்த ஒரு ரக்பி வீரரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2 வயது சிறுமியின் பெற்றோரான அனிதாவும் மிர்சாத் ஹாட்ஸிக்கும் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது, நெடுஞ்சாலை 99 இல் மண் சரிவில் அவர்கள் சிக்கி உயிரிழந்தனர்.

கடந்த வார இறுதியில் தென்மேற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள முக்கிய சாலைகளில் ஏற்பட்ட பல மண் சரிவுகளில் டஃபே ஏரி மண் சரிவு ஒன்றாகும்.

அதிகாரிகள் சிதைவுகளில் இருந்து மொத்தம் நான்கு உடல்களை மீட்டுள்ளனர். அதே நேரத்தில் ஐந்தாவது சடலம் இதுவரை கிடைக்கபடவில்லை.