இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று
197 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
👤 Sivasankaran2 Dec 2021 3:42 PM GMT

இலங்கையில் மேலும் 197 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இன்று இதுவரை 735 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 565,468 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (01) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,399 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 341 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire