Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மதவாதிகளில் தலையீடு இன்மையால் அமைதியான முசாபர் நகர்.

மதவாதிகளில் தலையீடு இன்மையால் அமைதியான முசாபர் நகர்.

உத்திரப்பிரதேசத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களும் மதவாதிகளின் தூண்டுதலால் கலவரத்தில் ஈடுபட்ட உயர்ஜாதிஇந்துக்களும் தங்களின் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் மதமுரண்பாடுகள் அகன்று அமைதியான வாழ்க்கையை நோக்கி அவர்களின் எதிர்காலம் செல்கிறது.

👤 Saravana Rajendran10 Feb 2018 7:43 AM GMT
மதவாதிகளில் தலையீடு இன்மையால் அமைதியான முசாபர் நகர்.
Share Post

உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் 2013 ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம் மதக்கலவரம் ஏற்பட்டது,இதில் 40 ஆயிரம் மக்கள் வெவ்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்தார்கள். 13 இஸ்லாமிய இளைஞர்கள் கொடூரமாக முஸ்லீம் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். பலர் ஊரை மொத்தமாக காலி செய்தார்கள்.

இந்தக் கலவரம் முஸ்லீம் மக்களுக்கும் உயர்ஜாதி இந்துக்களுக்குமிடையில் நடந்தது. பல வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக முடியாத பிரச்சனை இப்போது முடிந்துள்ளது.
கலவரத்தைத் தூண்டிய சங்கீத் சோன், மகேஷ் சர்மா, ஆதிதியநாத், உள்ளிட்ட 7 பேர் மத்திய அமைச்சர்களாகவும், மாநில அமைச்சர்களாகவும், முதல்வராகவும் பதவியேற்று விட்டனர். ஆனால் இவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட உயர்ஜாதி இளைஞர்கள் கலவரம் மற்றும் கொலைவழக்குகளில் சிக்கி தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர்.
இந்த நிலையில் மதவாதிகளின் தூண்டுதலால் தான் நாங்கள் தவறுசெய்துவிட்டோம் எங்கள் பகுதிக்கு இனி பாஜகவினர் வரக்கூடாது என்று உயர்ஜாதி இந்துக்கள் ஒன்றுகூடி தீர்மானம் போட்டுள்ளனர்.
மற்றோரு பக்கம் தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்க சென்றார்கள். இஸ்லாமியர்களைக் கொலைசெய்து சிறையில் இருக்கும் உயஜாதி இந்து இளைஞர்களின் குடும்பத்தினர் நகரில் உள்ள பாதிக்கப்பட்டஇஸ்லாமியர்களின் வீடுகளுக்குச் சென்று மன்னிப்பு கேட்டார்கள்.
இந்த நிலையில் இஸ்லாமியர்கள் மீது உயர்ஜாதி இந்துக்கள் அளித்த அனைத்துப் புகார்களையும் காவல்நிலையத்தில் இருந்து திரும்பப்பெற்றனர். இதனை அடுத்து நகரில் எந்த இந்து அமைப்பினரும் கலந்துகொள்ளக்கூடாது, முக்கியமாக பாஜக பிரமுகர்கள் கலந்துகொள்ளகூடாது என்ற கடுமையான நிபந்தனையுடன் கலவரத்திற்கு முன்பு எங்கு பஞ்சாயத்து கூட்டப்பட்டதோ அதே இடத்தில் பஞ்சாயத்து நடந்தது. பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டது.
முதல் நாள் பஞ்சாயத்தில் இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் அவர்களையும் பஞ்சாயத்தில் கலந்துகொள்ள நேரில் சென்று அழைப்பு விடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து உயர்ஜாதி இந்துக்கள் இஸ்லாமியர்களின் பகுதிக்குச்சென்று அவர்களை அழைத்தனர். மேலும் இந்து அமைப்புகள், பாஜகவினர் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்ற உறுதிமொழியும் அளித்தனர்.
இதனை அடுத்து வெள்ளிக்கிழமை அன்று முசாபர் நகர் பஞ்சாயத்து கூடியது, "உத்திரப் பிரதேசத்தில் நடந்த மிகபெரிய பஞ்சாயத்து என்று கருதப்படும் இந்தப் பஞ்சாயத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்களிடம் உயர்ஜாதி இந்துக்கள் இனி அனைவரும் பகைமையை மறந்து அமைதியாக சகோதரர்களாக வாழ்வோம் என்று கூறினர். மேலும் வந்த இஸ்லாமியர்களுக்கு உயர்ஜாதி இந்துக்கள் விருந்தளித்தனர். இதனை அடுத்து தாங்கள் கொடுத்த புகாரை திரும்பபெற்றுவிட முடிவு செய்த இஸ்லாமியர்கள், கொலைவழக்கில் பிடிபட்டு சிறையில் உள்ள 53 உயர்ஜாதி இளைஞர்கள் மீதான வழக்கை சட்டத்தின் பார்வைக்கு விட்டுவிட்டனர்.
பஞ்சாயத்தில் இஸ்லாமியர்களின் வணிகத்தளங்களுக்கு ஆதரவு அளிப்பது, விவசாய நிலங்களில் பணிசெய்வது, கால்நடைகளை பராமரிப்பது என இஸ்லாமியர்களுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு தருவோம் என்று உறுதியளிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஹரஹர மஹாதேவ், அல்லாகு அக்பர் என்று முழக்கமிட்டனர். ராமர் கோவில், தாஜ்மகால் போன்றபிரச்சனைகளை பெரிதாக்கி இஸ்லாமியர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று ஆளும் மதவாத கும்பல்கள் கூச்சலிட்டுக்கொண்டு இருக்கும் போது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகான இரண்டாவது பெரிய கலவரம் என்று வர்ணிக்கப்படும் கலவரம் ஏற்பட்ட முசாபர் நகர் மக்கள் தற்போது மதவாதிகளின் சூழ்ச்சியை உணர்ந்து திருந்தி அமைதியாக வாழ முடிவு செய்துள்ளதை பல சமூகநல ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.