Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » இந்தியாவில் மக்களாட்சி அல்ல; அதானி ஆட்சிதான் நடக்கிறது!

''இந்தியாவில் மக்களாட்சி அல்ல; அதானி ஆட்சிதான் நடக்கிறது!''

அதானியின் சுரங்க திட்டத்தை எதிர்த்த ஊடகவியலாளர் அமுருதா சிலீக்கு விசா வழங்க மறுத்த இந்தியா! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஊடகவியலாளருக்கு இந்தியா விசா வழங்க மறுத்துவிட்டது. இதனை அடுத்து அவர் பிரபல ஆஸ்திரேலிய ஊடகமான ஏபிசி.யில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

👤 Saravana Rajendran13 Feb 2018 1:14 AM GMT
இந்தியாவில் மக்களாட்சி அல்ல; அதானி ஆட்சிதான் நடக்கிறது!
Share Post

சுயலாபத்தை விரும்பும்சிலர் தங்களது கருத்துகளை தங்களுக்குத் தேவையானவைகளாவே வெளியில் கூறிக் கொள்வார்கள். அவர்களது கருத்துகள் குழந்தைத்தனமாகவும், தேவையற்றதாகவும் இருந்தபோதிலும், அவர்கள் இருக்கும் இடம் கருதி பலர் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்தியாவில் இது நடக்கிறது. நான் பிறந்த இந்தியாவில் இவ்வாறு நடப்பது எனக்கு மிகவும் பெருமை(!) சேர்க்கும் ஒன்றாக உள்ளது.


தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ள மக்களாட்சி நாடாக இந்தியா உள் ளது. இதை பிரபல வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குகா கோடிட்டுக் காட்டியுள்ளார். அதாவது காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பிறகு மீண்டும் ஒரு காலனி ஆதிக்கச்சூழலில் சிக்கியுள்ளோம் என்ற பொருள் பட அவர் கூறியுள்ளார்.

அரசியல் எழுத்தாளரான சுனில் ககலானி கூறும்போது, ''இந்தியா தற்போது குடியரசு என்பதை பரிசோதிக்கும் மிகப்பெரிய களமாக உள்ளது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சிகள் நடந்துகொண்டிருந்த போது இந்தியாவில் அதன் நிழல்கூட படவில்லை'' என்று கூறுகிறார்.

ஆனால் விடுதலைக்குப் பிறகு அங்கு 'ரெடிமேட் குழந்தையாக' மக்களாட்சி மலர்ந்தது. இந்த மக்களாட்சி அதிகாரம் இந்தியாவின் அனைத்து மூலை முடுக் குகளிலும் பரவிட்டது. இன்றும் அது தொடர்கிறது. இந்தியா மக்களாட்சியின் மிகப்பெரிய பெருவெளி (பிரபஞ்சம்) ஆகும். இங்கே அனைவருக்கும் சமமான உரிமையை அதன் அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது. சம உரிமையை அனுபவிக்கும் வசதி, ஊடகச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், என அனைத்தும் அங்கே உண்டு. நான் முன்பு இந்தியா சென்ற போது சுதந்திரமாக எனது உறவினர்களைச் சந்தித்தேன்.

கூட்டத்தோடு கூட்டமாக பயணித்தேன், தெரியாத பல முகங்களுக்கு வணக்கம் கூறி என்னை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். எனக்கு அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது, இருப்பினும் பல புதியவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். இந்தியாவிற்கு வெளியில் இருந்து பார்க்கும் போது இதெல்லாம் தெரியாது. சீனா போன்ற நாடுகளில் இல்லாத ஒரு மக்களாட்சி உரிமைகள் அங்கே இருக்கிறது.

ஆனால்,சில ஆண்டுகளாக அந்த உரிமைகள் பறிபோய்க்கொண்டு இருக்கின் றன. நீண்ட ஆண்டுகாலமாக உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருந்த ஜாதீய அடக் குமுறை, பாலின அடக்குமுறைபோன் றவைகள்வெளிப்படையாகதெரி கின்றன. ஊடக சுதந்திரம், நீதித்துறை போன்றவைஅடக்குமுறைக்குஆளாகி வருகின்றன. சில ஊடகங்கள் தங்களின் ஆதரவு ஆளும் கட்சிக்கு அடிமை கள்போல்போலிச்செய்திகளைதொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டுஇருக்கின்றன.இதை எதிர்கொள்வதே நேர்மையான ஊடகங்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. இப்போது போலிச் செய்திகளை உண்மை களாக்கும் வரலாற்று திருத்தங்களும் தொடர்கிறது.

சில நாள்களுக்கு முன்பு நான் ஒரு அனுபவத்தை எதிர்கொண்டேன். நானும், எனது நண்பர்களும் இணைந்து நடத்தும் ஒரு ஊடக நிறுவனத்திற்காக இந்தியா தொடர்பான தகவல்களைத் திரட்ட அங்கு சென்று பொருளாதார நிபுணர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், சூழியல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் மாணவர் தலை வர்களை சந்திக்க முடிவு செய்திருந்தோம்.

நாங்கள் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா செல்ல விசாவிற்கு விண் ணப்பம் செய்துவிட்டு காத்திருந்தோம், காத்திருந்தோம்,காத்துக்கொண்டேஇருந் தோம். பிப்ரவரி மாதம் நாங்கள் செல்ல வேண்டிய தேதியும் வந்துவிட்டது. ஆனால், எங்களது விசா விண்ணப்பம் அதிகார மய்யத்தின் அழுத்தத்தினால் கிடப்பில் போடப்பட்டு விட்டது என்று தெரிந்த உடன், சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.

நான் சிட்னியில் உள்ள இந்திய தூதர கத்தைத் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர்களோ என்னுடைய பெயரைக் கேட்டதுமே, 'காத்திருங்கள்' என்று கூறி விட்டார்கள். தொலைபேசியில் பல மணிநேரம் காத்திருந்தவள் நானாகத்தான் இருக்கும். எனது விசா என்ன ஆனது என்று ஒரு சிறிய தகவல்கூட எனக்குத் தெரியவில்லை. உலகின் மிகப்பெரிய குடியரசு இவ்வளவு சர்வாதிகாரப் போக்கில் உள்ளதா என்று எனக்கு கவலை அளிக்கிறது. அதைக் குடியரசு என்று சொல்வது மிகப் பெரிய நகைச்சுவையாகத்தான் இருக்கும்.

எனக்குத் தெரிந்த தூதரக அதிகாரி களைத் தொடர்புகொண்டேன். இந்திய வெளியுறவுத் துறையினரைத் தொடர்பு கொண்டேன். இந்தியாவில் உள்ள முக் கியப் பதவிகளில் இருக்கும் எனது நண்பர்களையும், ஊடகவியலாளர்களையும் தொடர்பு கொண்டேன். நிறைய மின்னஞ்சல்கள் அனுப்பிவிட்டேன். ஆனால், எனக்குத் தெரிந்த நபர்களால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. தூதரகமோ, கான்சுலேட்டோ 'உங்கள் விசா விண் ணப்பம் சரிபார்க்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது' என்றுதான் மழுப்பலான பதில் கூறினார்கள். மாதங்கள், நாட்கள், நேரங்கள், நிமிடங்கள், வினாடிகள் கடந்துவிட்ட பிறகு, எனக்கு ஒன்று புரிந்தது. ஓ அதானி பற்றிய செய்தியை எழுதியிருந்தவள்தானே நான், அந்தப் போராட்டத்தை உலகிற்கு தெரிய வைத்தவள் தானே நான் என்று புரிந்தது.


அதானி நிலக்கரி சுரங்கம் தொடங்க முனைந்தார்.அதற்கு எப்படியோ ஆஸ்தி ரேலிய அரசின் அனுமதியையும் பெற்றுக் கொண்டார். அப்படி அனுமதி வாங்கிய நிலக்கரி சுரங்கத்தின்மூலம் கடுமையான சுற்றுப் புறச்சூழல் பாதிப்பு ஏற்படுவது குறித்த விழிப்புணர்வை ஆஸ்திரேலியாவின் பிர பல ஊடகவியலாளர் ஸ்டீபன் லாங் மற்றும் அவரது உதவியாளர்கள் எழுத்துக்களின் மூலம் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஊட்டினர். மக்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. அவரது உதவியாளர்களின் முதன்மையானவள் நானும் என்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு விசா எப்போதும் கிடைக்கப் போவதில்லை, அதற்கான காரணத்தையும் இந்தியத் தூதரகம் கூறப்போவதில்லை,

ஆனால், தொடர்பில்லாத சிலர், டில் லிக்கு வந்து யாரைச் சந்திக்கப் போகிறீர்கள்? மாணவர் அமைப்பு தலைவர்களை ஏன் சந்திக்கவேண்டும்? நீங்கள் சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேச விரோதிகள், பேசவிரும்பும் நபர்களின் பெயர்ப் பட்டியலைத் தாருங்கள் என மிரட்டும் தொனியில் மின்னஞ்சல் அனுப்பு கிறார்கள். சுதந்திரமான ஒரு ஜனநாயகநாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய ஊடகத் துறைக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.

நானும் சளைக்காமல், நான் சந்திக்கப் போகும் நபர்களின் பெயர்ப் பட்டியலை அனுப்பினேன். அதில் கடந்த சில ஆண்டு களாக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட நபர்களின் பெயர்களும் உள்ளன. உட னடியாக எனக்கு ஒரு மடல் வந்தது, உங்களுக்கு விசா வழங்க முடியாது, நீங்கள் உங்கள் பயணத்தை ரத்து செய்வது நல்லது என்று எழுதியிருந்தார்கள். எனக்கு இதில் வியப்பேதுமில்லை. காரணம் இந்தியாவில் மக்களாட்சி அல்ல, அதானி ஆட்சிதான் நடக்கிறது, இதில் வியப்படையத் தேவையில்லை. இருப்பினும் ஜனநாயகம் என்னும் கயிறு அங்கு சுதந்திரமான கருத்தின் கழுத்தை இறுக்குகிறது, இதுதான் இந்தியா!

மிக மிக கவலையாக இதை நான் எழுதுகிறேன். உண்மையாக ஒரு புதிய இந்தியா மலர்ந்துகொண்டு இருக்கிறது. அந்த இந்தியாவில் உங்கள் கருத்துகள் முடக்கப்படும்.நான்பட்டியலிட்டுஅனுப் பிய நபர்கள் அந்த அரசுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்கள் கருத்துகள், அவர்களின் எழுத்துகள், அவர்களின் பேச்சுகள் போன்றவை புதிய இந்தியாவிற்குப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
அங்குகல்வியாளர்கள்அரசாளுபவர் களின் எண்ணத்தை மட்டுமே எழுதவேண் டும், போதிக்கவேண்டும். அப்படி அரசாளு பவர்களுக்கு ஒத்துஊதாவிட்டால் சிறை யிலடைக்கப்படுவீர்கள், அடையாளம் தெரியாத நபர்களால், பிரபல அமைப்பு களின் பெயரில் வருபவர்களால் சித்திர வதைக்கு ஆளாவீர்கள், கொலை செய் யப்படுவீர்கள். நான் பேசவிருந்த ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். அங்கு பேசுபவர்கள் கொல்லப்படுவார்கள். இப் போதும் அங்கே உயிருக்கு (இந்தியாவில் சுதந்திரமான கருத்தை தெரிவிப்பவர்களின்) உத்திரவாதம் இல்லை

ஜனநாயகத்தில் ஆட்சியாளர்களின் கருத்தை மட்டுமே பிரதிபலிக்க முடியும் என்பது இந்தியாவை ஆளும் தற்போதைய அரசு கொடுத்த புதிய பொருளாகும்.

தமிழில்: சரவணா ராஜேந்திரன்

இதன் ஆங்கில வடிவம் பார்க்க இங்கே செல்லவும்

http://voiceforjustice.ca/worldnews/asia/its-about-adani-did-india-deny-me-a-journalists-visa-because-of-a-story-558863