Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தேசபக்தி என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமா??

தேசபக்தி என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமா??

பள்ளியில் தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் மாணவிகளை தலைமையாசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.. அதில் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியரே இந்த கொடுமையை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் காரணமாக அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதேபோல் மாணவியின் பெற்றோர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

👤 Saravana Rajendran16 Feb 2018 11:07 AM GMT
தேசபக்தி என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமா??
Share Post

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள நான்கு மாணவிகள் ஒன்றாக சேர்ந்து காலை தேசிய கீதம் பாடி இருக்கிறார்கள். அவர்கள் சத்தமாக பாடவில்லை என்று தலைமை ஆசிரியர் சத்தம் போட்டு உள்ளார்.பிறகு அவர்களை தனியாக அழைத்து மீண்டும் பாடவைத்துள்ளார். மாணவிகள் அச்சத்தின் காரணமாக மெல்லிய குரலில் பாடினார்கள்.இதனால் கோபம் அடைந்த அவர் நான்கு போரையும் மோசமாக தாக்கி இருக்கிறார். பின் வெளியே வெயிலில் நான்கு மணி நேரம் நிற்க வைத்துள்ளார். அவர் அந்த இடத்திலேயே இதனால் மயக்கம் அடைந்துள்ளனர்.
இதனால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். நான்கு பேரில் ஒரு மாணவியின் உடல் நிலை மோசமாக இருக்கிறது. அந்த மாணவிதான். இதனால் அந்த மாணவியின் பெற்றோர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியைவிட்டு நீக்க உத்தரவிட்டு இருக்கிறார்கள்.