Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஜெயலலிதா மகள் டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவு??

ஜெயலலிதா மகள் டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவு??

பெங்களூரைச் சேர்ந்தவர் நான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணைசெய்த நீதிமன்றம் அப்பல்லோ மருத்துவமனைக்கு ரத்தமாதிரி குறித்து அறிக்கை கேட்டுள்ளது.

👤 Saravana Rajendran23 Feb 2018 9:35 AM GMT
ஜெயலலிதா மகள் டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவு??
Share Post

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் ஜெயலலிதாவுக்கு மகளாகப் பிறந்தேன். மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டேன். தற்போதுதான் நான் ஜெயலலிதாவின் மகள் என்பது உறவினர்கள் மூலமாக எனக்கு தெரியவந்தது. ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து, எங்கள் ஜாதிவழக்கப்படி சடங்குகளைச் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அவரின் சகோதரி தீபா ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தீபக் அளித்த பதில் மனுவில், "என் அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளைக் குறிவைத்தே, அம்ருதா அவரின் மகள் எனக்கூறி பொய்யான வழக்கைத் தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு சைலஜா என்ற சகோதரியே கிடையாது. என் பாட்டி சந்தியாவுக்கு, ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். எனவே, அம்ருதாவின் வழக்கைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் பதில் மனுசெய்ய சில நாட்கள் தேவை என்று கேட்டிருந்தது. இதற்கிடையே, ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா என அப்போலோ மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அனுப்பியுள்ள அறிக்கையில், "அம்ருதா, ஜெயலலிதாவின் மகளா என்பதுகுறித்து டி.என்.ஏ சோதனை நடத்த ரத்த மாதிரி அல்லது உயிரியல் மாதிரி இருக்கிறதா என்றும், மார்ச் 7-ம் தேதிக்குள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளது.