Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » திருமணத்திற்காக கடத்தப்படும் இளைஞர்கள்

திருமணத்திற்காக கடத்தப்படும் இளைஞர்கள்

பீகார் மாநிலத்தில் திருமணம் செய்வதற்காக இளைஞர்கள் அதிக அளவு கடத்தப்படுகின்றனர். கடத்தப்பட்ட இளைஞர்களுக்கு தூப்பாகி முனையில் திருமணம் நடந்துவிடுகிறது, இந்த திருமணத்தில் அரசியல் பிரமுகர்களும், காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

👤 Saravana Rajendran24 Feb 2018 3:10 PM GMT
திருமணத்திற்காக கடத்தப்படும் இளைஞர்கள்
Share Post

மிகவும் பின் தங்கிய மாநிலமான பீகாரில் பெண்களுக்கு அவர்களது ஜாதிக்குள் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்பதற்காக தங்கள் ஜாதியைச் சேர்ந்த இளைஞர்களை கடத்திச்சென்று கட்டயாமக திருமணம் செய்துவைக்கின்றனர், இந்த திருமணத்திற்கு பாகடுவா என்று பெயர்.
பீகார் போன்ற மாநிலங்களில் ஜாதிவெறி மிகவும் கொடூரமாக உள்ளது, அங்கு குழந்தை மணம், கட்டயா திருமணம் போன்றவை மிகவும் சாதாரனமாக நடைபெறுகிறது.
குறிப்பிட்ட ஜாதியைச்சேர்ந்தவர்கள் தங்களின் மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது மிகவும் விசித்திரமான நிகழ்வாக உள்ளது, பல ஊர்களுக்குச் சென்று தங்களின் ஜாதியில் உள்ள இளைஞர்களை முதலில் தேர்ந்தெடுக்கின்றனர். பிறகு இரவு நேரம் அந்த இளைஞர் வயல்வெளி அல்லது ஊருக்குவெளியில் வரும் நேரம் பார்த்து அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று விடுகின்றனர். அந்த இளைஞருக்கு இந்திய திருமணச்சட்டம் கூறும் திருமணம் வயது 21 என்ற விதிமுறையை பின்பற்றுவது கிடையாது, கடத்தப்படும் இளைஞர்கள் 15 வயதாக இருந்தாலும் அவர்களை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று விடுகின்றனர்.
கடத்திச் சென்ற இளைஞர்க்கு மதுவை வலுக்கட்டாயமாக கொடுக்கு விடுகின்றனர். போதையில் இருக்கும் இளைஞருக்கு தங்கள் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்துவைத்துவிடுகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 3,400 இளைஞர்கள் இவ்வாறு கடத்தப்பட்டு திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர்.
தினசரி 9 இளைஞர்கள் இவ்வாறு கடத்தப்படுகின்றனர். சாதாரன மக்கள் மட்டுமல்லாமல் காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பலரும் தங்கள் வீட்டு பெண்களுக்கு இவ்வாறு இளைஞர்களை கடத்தி வந்து திருமணம் செய்துவைத்து விடுகின்றனர். இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் அழைக்கப்படுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, "மாப்பிள்ளை தேடிப்பிடித்து தங்களது வீட்டுப்பெண்களை திருமணம் செய்துவைப்பது சில சமூகத்தில் கோழைத்தனமாக கருதுகின்றனர். மேலும் திருமணம் செய்ய மாப்பிள்ளை வீட்டார் அதிக அளவில் வரதட்சனை(மணக்கொடை) கேட்கின்றனர். இந்த காரணங்களுக்காக பெரும்பாலும் இளைஞர்களைக் கடத்திவந்து திருமணம் செய்வது அதிகரித்து விடுகிறது,
கடந்த டிசம்பர் மாதம் ஒரு இளைஞர் அழுதுகொண்டே மணப்பெண்ணுக்கு தாலிகட்டி திருமணம் முடிக்கும் ஒரு காணோலி சமூகவலைதளங்களில் பரவியது அதே போல் சில இடங்களில் திருமணப்பெண்ணே கைத்துப்பாக்கியைக் கொண்டு சென்று இளைஞர்களை மிரட்டி கடத்தி வந்து திருமணம் செய்யும் நிகழ்வும் நடந்துள்ளது. இது போன்ற நிகழ்வுகளில் மிகவும் குறைந்த அளவே வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது, அதுவும் திருமணம் நடந்து முடிந்த உடன் இளைஞர்களின் பெற்றோர் புகாரை திருமப்பெற்றுக்கொள்கின்றனர். 2014-ம் ஆண்டில் 2,526, 2015-ல் 3 ஆயிரம் பேர், 2016-ல் 3070 பேரும், 2017-ல் 3,400 பேர்களும் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.