Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்துள்ள உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு, இதோ நான்கு கடிதங்கள்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்துள்ள உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு, இதோ நான்கு கடிதங்கள்

பிஜேபி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை என்ன? அன்றாடம் அவர்கள் அனுபவிக்கும் அவலங்கள், இழிவுகள், வன்முறைகள் எத்தகையன? இதோ முக்கிய பிரமுகர்களின் நான்கு கடிதங்கள். ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

👤 Saravana Rajendran8 April 2018 2:33 AM GMT
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்துள்ள உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு, இதோ நான்கு கடிதங்கள்
Share Post

நான் தாழ்த்தப்பட்டவன் என்பதால் என்னை கேவலப்படுத்துகிறார், சாமியார் முதல்வர் ஆதித்யநாத் - அசோக் தொகர்
இடாவா மக்களவை உறுப்பினர் அசோக் தொகர் உத்தரப் பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் மீது கடுமையான குற்றச்சாட்டு களை வைத்து மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை, உறுப்பினர்களை மிகவும் கேவலமாக நடத்துவதாக இரண்டாவது கடிதம் ஒன்று மோடிக்குச் சென்றுள்ளது, உத்ரப்பிரதேசம் இடாவா மக்களவை தொகுதி உறுப்பினர் அசோக் தொகர் இவர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது, உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி நடந்த முழு அடைப்பின் போது இடாவா தொகுதியில் தாழ்த்தப்பட்ட அப்பாவி இளைஞர்கள் பலரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பட்டியலை ஆதார் அடிப்படையில் வீடுகளுக்குள் புகுந்து கைது செய்துள்ளனர். மேலும் ஒரியா ஜன்பத் பகுதியில் தாழ்த்தப்பட்ட சிறுவர்களைக் கூட காவல்துறையினர் விட்டுவைக்கவில்லை. மேலும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்குப் பிறகு மாநிலம் முழுவதும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்துவருகிறது, காவல் துறையினரே முன்னின்று தாக்குதல் நடத்துகின்றனர். இது குறித்து நான் உத்தரப்பிரதேச உள்துறை அமைச்சர் அமைச்சர் மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் ராம்லாலிடம் முழு மையான விபரம் கேட்டேன். இது குறித்து அமைச்சர் சரியான பதில் தராததால் நான் முதல்வரோடு தொலைபேசியில் பேசினேன், முதல்வர் எனது குரலைக் கேட்ட தும் தரக்குறைவாக பேச ஆரம்பித்துவிட்டார். அவரது வார்த்தைகளை நான் கடித்தில் எழுத முடியாது. இந்தக்கடித்தை நான் அழுதுகொண்டு எழுதுகிறேன், காரணம் எனக்கே இந்த நிலை என்றால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தாழ்த்தப் பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து கண்ணீர் சிந்துகிறேன். நீங்கள் எனது கண்ணீருக்கு ஆறுதல் கூறுவீர்கள் என்று நம்பி இந்தக் கடிதம் எழுதுகிறேன். இப்படி கடித்தில் எழுதியுள்ளார். இதற்கு முன்பு ராபர்ட்கஞ்ச் மக்களவை உறுப் பினர் சோட்டாலால் கர்வார் கடிதம் எழுதியுள்ள நிலையில் தற்போது இடாவா மக்களவை உறுப்பினரும் கடிதம் எழுதியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்பதால் என்னை அவமானப்படுத்தி விரட்டுகிறார், முதல்வர் சாமியார் ஆதித்யநாத் - சோட்டாலா கர்வார்
ராபர்ட்கஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினர் சோட்டாலா கர்வார் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் சாமியார் ஆதித்யநாத் அவர் வீட்டு வேலைக் காரர்கள் முன்பு கூட என்னை அவமானப்படுத்துகிறார், காவலாளிகளை விட்டு என்னை வெளியே விரட்டச் சொல்கிறார் என்று மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி யுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மிகவும் இளவயது நாடாளு மன்ற உறுப்பினர் சோட்டாலால் கர்வார், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் இருந்த இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவிடம் விலை போனவர்களில் இவரும் ஒருவர். இவர் மோடிக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் முதல்வர் சாமியார் ஆதித்யநாத், மற்றும் மாநில பாஜக தலைவர் நரேந்திர நாத் பாண்டே (பார்ப் பனர்) சுனில் பன்சால் உள்ளிட்டவர்கள் என்னை மிக வும் கீழ்த்தரமாக நடத்துகிறார்கள். நீங்கள் நாடுமுழுவதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கபடும் கொடுமைகள் பற்றி அறிந்திருக்க மாட்டீர்கள், நானே இதற்கு ஒரு சாட்சியாக இருக்கிறேன், இத்தனை நாள் நான் கட்சியின் பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந் தேன், ஆனால் இனிமேலும் அமைதியாக இருந்தால் நான் பிணத்திற்கு ஒப்பானவன் ஆகிவிடுவேன். ஆதித்யநாத் ஆட்சிக்கும் வரும் வரை எனக்கு மாநிலத்தில் பாஜகவினரிடம் சிறிது மரியாதை கிடைத் தது. ஆனால் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு நான் சொல்லக்கூடாத வகையில் அவமானப்படுத்தப்படு கிறேன், எனது தொகுதிக்கு எந்த ஒரு பலனும் கிடைத்து விடக்கூடாது என்பதில் சாமியார் ஆதித்யநாத் முதல் பாஜகவின் மாநில தலைவர்கள் பிரமுகர் உள்ளிட்டோர் முனைப்பாக இருக்கின்றனர். பாஜக தலைவர்களால் நானும் எனது சகோதரரும் அவமானப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இது குறித்து நான் சாமியார் ஆதித்யநாத்திடம் புகார் கூறச் சென்றேன், அங்கு எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந் தது, அவமானப்படுத்தப்பட்டேன், (ஒரு நாயைப் போல்) விரட்டப்பட்டேன், சாமியார் முதல்வர் எனது ஊர்ப்பெய ரைக் கூறி அந்த ஊரிலிருந்து வந்தவனை வெளியில் தூக்கி வீசுங்கள் என்று எனது காதுகேட்கும் படி பேசி யுள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூட பாராமல் முதல்வரின் காவலர்களால் நான் அவமானப் படுத்தப்பட்டேன், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்குச் சொந்தமான நிலங்கள் பாஜக உயர்ஜாதிப்பிரமுகர்களால் வன்முறையாக பிடுங்கப்பட்டு வருகிறது. இது குறித்து நான் யாரிடம் சென்றாலும் அவமானம் ஒன்றே எனக்கு கிடைக்கிறது, காவல் நிலையத்தில் கூட என்னை அமரவைத்து பேசமறுக்கிறார்கள். ஆகவே இறுதியாக உங்களிடம் நீதிகேட்டு இந்தக் கடிதம் எழுதியிருக்கிறேன், நீங்கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன், நான் 2013-ஆம் ஆண்டு பகுஜன்சமாஜ்வாடி கட்சியை விட்டு பாஜக சிறந்த கட்சி என்ற நோக்கில் உங்களுடன் இணைந்து கட்சிப்பணியாற்றினேன். ஆனால் எனக்கு கிடைத்தது அவமானம் மட்டுமே என்று மோடிக்கு இந்தியில் நாடாளுமன்ற லட்டர் பேடில் எழுதியுள்ளார். இது குறித்து என்.டி. டிவிவிக்கு அளித்த பேட்டியில் கண்டிப்பாக எப்போதும் போல் பாஜகவும் சாமியாரும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி என்மீது பழியைப் போடுவார்கள். நான் கட்சிக்கு துரோகமிழைத்துவிட்டேன் என்று கூறுவார்கள். அல்லது நான் எதிர்கட்சியினரிடம் பணம் வாங்கிவிட்டேன் என்று ஏதாவது ஒரு கார ணத்தை கூறுவார்கள். நீங்கள் (ஊடகத்தினர்) எனது தொகுதிக்குச் செல்லுங்கள் எனது உறவினர்கள், எனது ஊர்க்காரர்களிடம் பேசுங்கள், உண்மைதெரியும். நான் மிகவும் அவமானப்படுத்தப் பட்டுவிட்டேன் என்று கண்ணீர் விட்டு அழுதவாறு கூறினார்.
என்னை மிகவும் மோசமான வார்த்தையில் விமர்சித்தார் முதல்வர் ஆதித்யநாத்
- பெண் துறவி சாவித்திரி பாய் புலே
பாஜகவின் பயிரச் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் சாமியாரினியுமான தாழ்த்தப் பட்ட வகுப்பைச்சேர்ந்த சாவித்திரிபாய் புலே ஊடகத்தினரிடம் பேசும் போது இந்த அரசில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த ஒரு மரியா தையும் கிடைப்பதில்லை, நானே பலமுறை அவமானப்படுத்தப்பட்டுள்ளேன், இந்த நிலையில் நீதிமன்ற தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரிவினருக்கு பாதுகாப்பைத் தரும் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்துள்ளது. இது மிகவும் மோசமான நடவடிக்கை ஆகும், இன்று சட்டத்தை நீர்த்துப் போகசெய்வார்கள். நாளை இட ஒதுக்கீடு வேண்டாம் என்று தீர்ப்பு வரலாம்,.
இதை மத்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கும், அரசுக்கும் நீதித் துறைக் கும் தொடர்பில்லை என்று பாஜகவினர் கூறுவதை நான் ஏற்கமாட்டேன், அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு உடனே ஏன் செய்யவில்லை, அப்படி என்றால் தாழ்த் தப்பட்டவர்களை இந்த அரசு மதிக்கவில் லையா? என்னிடம் கேட்டால் ஆம் என்று கூறுவேன். என்னை இந்த மாநிலத்தில் தலைமைப் பொறுப்பில் (சாமியார் ஆதித்யநாத்) இருப்ப வரும் இதர கட்சியினரும் அரசு அதிகாரிகளும் மதிப்பதில்லை, அது குறித்து நான் பெரிது படுத்தவில்லை. ஆனால் மற்ற தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார்த்தேன், நாட்டில் தற்போது நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் தாழ்த்தபப்ட்டவர்களுக்கு மிகபெரும் அநீதி யைத் தருவதாக உள்ளது என்று பேசினார்.
சாமியார் ஆதித்யநாத் பற்றி கூற என்னிடம் ஒன்றுமில்லை, அவமானங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது-ஜாதவ் கமாஜ்
மோடி அவர்களுக்கு வணக்கம், நான் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜாதவ் சுமாஜ் பிரிவைச்சேர்ந்த நகீனா மக் களை உறுப்பினர் இட ஒதுக்கீட்டின் பலனாக நான் மருத்துவம் படித்து அமெரிக்க சென்று உயர்நிலை இதய வியல் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றும் தங்கப் பதக்கமும் வாங்கியுள்ளேன், உலகில் மொத்தம் 7 நாடுகளில் உள்ள இதயவியல் மருத்துவம் தொடர்பான அமைப்பு களில் சிறப்பு உறுப்பினராக இருக்கி றேன், இவ்வளவு அதிகமான அமைப் புகளில் உறுப்பினராக இருக்கும் மருத் துவர் இந்தியாவில் நான் ஒருவன் மட்டுமே. இட ஒதுக்கீட்டின் காரண மாக நகீன தொகுதியில் (தனி) எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது, நான் உங்கள் கட்சியின் சார்பில் நின்று உத்தரப்பிரதேசத்தில் மிகவும் அதிக எண்ணிக்கையில் வாக்கு களைப் பெற்று வெற்றிபெற்ற 3 பேரில் நானும் ஒருவன் ஆனால் என்னுடைய இத்தனை திறமைகளும் இன்று உங் கள் கட்சிக்காரர்களாலும் முதல்வரா லும் மதிப்பிழக்கப்பட்டுள்ளது. நான் என்ன தவறு செய்தேன், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொடுங்கள் என்னைப் போல் இன்னும் பல திறமையானவர்கள் வருவார் என்று கூறினேன். ஆனால் சமீபகாலமாக என்ன நடந்துகொண்டு இருக்கிறது,
இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு மரியாதையும் கிடைக்கவில்லை, அவர்களை அடிமைகளாக பார்க்கும் அவலநிலை உருவாகிவிட்டது, உங்கள் கட்சியினராலும், கட்சியைச் சார்ந்த முதல்வராலும் தலித் சமூகத் தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பி னரான நானே தினந்தோறும் கடுமை யான அவமானங்களைச் சந்தித்து வருகிறேன், முதல்வர் சாமியார் ஆதித் யநாத் குறித்தும் துணை முதல்வர் மவுரியா குறித்தும் நான் பெரிதாக கூறிக்கொள்ள ஒன்றுமில்லை, எனக்கு அவர்களிடமிருந்து கடுமையான அவமானங்களே மிஞ்சியது. நான் உங்களிடம் கேட்டுகொள் வது இவ்வளவு தான். தனியார் துறை யிலும் இடஒதுக்கீடு கொடுங்கள், நீதி மன்றம் நீர்த்துப் போகச்செய்த அந்த சட்டத்தை அரசமைப்பு பிரிவில் சேர்ந்து நிரந்தரமாக்குங்கள் இது தான் எனது வேண்டுகோள். நானும் தாழ்த்தப்பட்ட சமூகமும் இறுதியாக வைத்துள்ள நம்பிக்கை அனைத்து அதிகாரமிக்க பிரதமர் என்ற பதவி உங்களிடம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத்தான். உதவி செய்வீர்கள் என்று நினைக்கிறேன் என்று கடிதங்களில் கூறினார்.