Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » யானைகளைப் பாதுகாக்கப் போராடிய விலங்குகள் நல ஆர்வலர் மேடம் டாம் டாஃப்னி ஷெல்ட்ரிக் காலமானார்

யானைகளைப் பாதுகாக்கப் போராடிய விலங்குகள் நல ஆர்வலர் மேடம் டாம் டாஃப்னி ஷெல்ட்ரிக் காலமானார்

யானைகளைப் பாதுகாக்கப் போராடிய விலங்குகள் நலம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மேடம் டாம் டாஃப்னி ஷெல்ட்ரிக் 83 வயதில் புற்றுநோயால் காலமானார்.

👤 Saravana Rajendran14 April 2018 3:15 PM GMT
யானைகளைப் பாதுகாக்கப் போராடிய விலங்குகள் நல ஆர்வலர் மேடம் டாம் டாஃப்னி ஷெல்ட்ரிக் காலமானார்
Share Post

அவர் 230க்கும் அதிகமான யானைகளைக் காப்பாற்றியிருக்கிறார். வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அவற்றின் தந்தத்திற்காக வேட்டையாடப்படுவதுண்டு. வறட்சி காரணமாக சில யானைகள் மடிந்து போகும். இத்தகைய காரணங்களால் யானைக் குட்டிகள் உரிய கவனிப்பின்றி தனித்துப் போகின்றன. அத்தகைய யானைக் குட்டிகளைத் தத்தெடுத்த டாஃப்னி, அவற்றுக்கென மிகுந்த சத்துள்ள பால்பொருட்களை உருவாக்கி அவைகளுக்கு ஊட்டி வளர்த்தார்.
கென்யாவில் அவர் தொடங்கிய தொண்டுநிறுவனம், தனித்துவிடப்பட்ட யானைகளை பராமரிப்பதில் புகழ்பெற்றது.