Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » நாட்டை ஆளும் பாஜக மக்களுக்கு கற்றுத்தந்தது மதவாத வெறுப்புணர்வு தான்

நாட்டை ஆளும் பாஜக மக்களுக்கு கற்றுத்தந்தது மதவாத வெறுப்புணர்வு தான்

நடிகை கரீனா கபூர் இஸ்லாமியரை திருமணம் செய்ததால் அவரை இந்து இந்திய துரோகி என்று கூறிய மாடல் அழகி

👤 Saravana Rajendran15 April 2018 3:12 PM GMT
நாட்டை ஆளும் பாஜக மக்களுக்கு கற்றுத்தந்தது மதவாத வெறுப்புணர்வு தான்
Share Post

ஜம்மூவில் உள்ள கட்டுவா பகுதியில் 8 வயது சிறுமி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மற்றும் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு மூழுவதும் பெரும் எதிர்ப்பலைய எழுப்பியுள்ளது,
இந்த விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் டிவிட்டரில் கண்டனப் பதிவு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடல் அழகு ஸ்வரா பாஸ்கர் என்பவர் கரீனா கபூரின் பதிவிற்கு மறுபதில் இட்டுள்ளார். அதில் "நீ இந்துவாக இருந்துகொண்டு இஸ்லாமியரை திருமணம் செய்ததால் இந்துவிற்கும் இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டாய் என்று பதிலிட்டுள்ளார்.
கரீனா கபூர் பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் குடும்பத்திலிருந்து வந்தவர், இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு குவாலியர் நவாப் வம்சத்தைச் சேர்ந்த பிரபல இந்தி நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்துகொண்டார்.
இதனால் இவரை இந்துக்களுக்கு எதிரானவர் என்று இந்துத்துவ மதவாதிகள் பிரச்சாரம் செய்துவருகின்றனர். 2017-ஆம் ஆண்டு ஜெய்பூரில் நடந்த இந்துமதமாநாட்டில் இவரது படத்தை அட்டையில் போட்டு இவர் லவ்ஜிகாத்திற்கு பலியானவர்(இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை திருமணம் செய்வதை இந்துத்துவாதிகள் லவ்ஜிகாத் என்று கூறுவார்கள்) என்று கூறி ஒரு சிறிய நூலை வெளியிட்டிருந்தனர்.
இவருக்கு சைப் அலிகானுக்கும் பிறந்த குழந்தைக்கு தைமூர் அலிகான் என்று பெயரிட்டிருந்தார். உடனே மதவாதிகள் தைமூர் என்ற பெயரை வைக்க கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
தற்போது இந்துத்துவ வாதிகள் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்ததை கண்டித்த கரீனா கபூரை மீண்டும் இந்துமதத்திற்கும் இந்தியாவிற்கும் துரோகி என்று கூறியுள்ளனர்.
உண்மையில் பாஜக என்ற மதவாத கட்சி மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் மதவாதிகளின் கோடூரப் பிடியில் ஆட்கொண்டு சீரழிந்து வருகிறது,
ஒரு தவற்றை சுட்டிக்காட்டிய கரீனா கபூரை ஒரு பிரபல மாடல் அழகியே இந்து துரோகி என்று எழுதியிருப்பதில் இருந்து நாடு எந்த அளவு மதாவாத பிடியில் சீரழிந்துள்ளது என்று கண்டுகொள்ளலாம்.
Swara Bhasker ✔ @ReallySwara
You should be ashamed you exist. That God gave you a brain which you chose to fill with hate and a mouth you chose to spew filth from. You are a shame on India and Hindus. That shits like you feel emboldened to talk this crap publicly is this govt.'s legacy 🙏🏿 https://twitter.com/w_harsh_/status/985165214244057088 …
8:18 PM - Apr 14, 2018 2,685 1,103 people are talking about this Twitter Ads info and privacy
Swara Bhasker✔ @ReallySwara 14 Apr #KareenaKapoorKhan #IndiaAgainstRape #JusticeForOurChild #JusticeforAsifa #JusticeForUnnao pic.twitter.com/NEqPsArNC6