Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மதிமயங்குவார்களா கர்நாடக மக்கள்

மதிமயங்குவார்களா கர்நாடக மக்கள்

பாஜக கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர் பெயர் பட்டியலையும் இரண்டு கட்டமாக அறிவித்து விட்டது, இதில் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் இரண்டு பட்டியலிலும் இஸ்லாமியர், கிறிஸ்தவ, இதர சிறுபான்மை(பவுத்த, சீக்கிய மற்றும் ஜெயின்)பிரிவு வேட்பாளர் ஒருவர் கூட இல்லை.

👤 Saravana Rajendran17 April 2018 5:37 AM GMT
மதிமயங்குவார்களா கர்நாடக மக்கள்
Share Post

இதிலிருந்து இந்துக்களை மட்டும் நிறுத்தும் போது ஒட்டுமொத்த இந்துக்களும் தமக்கான கட்சி என்று கருதி வாக்களிப்பார்கள் என்ற ஒரு மனப்பாலைக் பாஜக குடித்துள்ளது. உத்திரப்பிரதேசம், குஜராத், அரியானா, போன்ற மாநிலத்தேர்தலிலிலும் இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் ஒருவரைக் கூட நிறுத்தவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 2016-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 87 விழுக்காடு இந்துக்கள், 14 விழுக்காடு முஸ்லீம்கள் 2 விழுக்காடு கிறிஸ்துவர்கள் ஒருவிழுக்காடு உள்ளனர்.
இதில் இந்துக்கள் என்று கூறப்படுபாவர்களில் லிங்காயத்துக்கள் 20 விழுககாடு மற்றும் தலித்துக்கள் 18 விழுக்காடு உள்ளனர். தென்மாநிலங்களாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மற்றும் கேரளாவில் ஆட்சியைப்பிடிக்க இஸ்லாமியர்களின் வாக்குகள் காட்டாயம் தேவை என்ற நிலையில் பாஜக ஒட்டுமொத்த இந்துக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற நினைப்பில் இறங்கியுள்ளது.
அதேவேளையில் காங்கிரஸ் கட்சி 15 இஸ்லாமியர்களையும், 4 இதர சிறுபான்மையினருக்கும் வாய்ப்பு அளித்துள்ளது.
பாஜகவினர் ரம்ஜான் பண்டிகைகளின் நோன்பு காலங்களில் கஜபோஜனம் என்ற பெயரில் கோவில்களிலும் பொது இடங்களிலும் இலவச உணவு வழங்கும் விழாநடத்தில் இஸ்லாமியர்களின் நோன்பு காலத்தை கேலிசெய்தனர் இதன் மூலம் இஸ்லாமிய வெறுப்பு கொண்ட மக்கள் தங்கள் பக்கம் திரும்புவார்கள் என்று எண்ணியிருந்தார்கள். மேலும் கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நல்லாட்சி நாள் என்ற பெயரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளைக் கொண்டாடினர். இதன் மூலம் நாங்கள் இந்துக்களுக்கானவர்கள் மட்டுமே என்ற ஒரு செய்தியைக் தொடர்ந்து கூறிவந்த நிலையில் தற்போது இஸ்லாமியர்கள் உட்பட எந்த ஒரு சிறுபான்மையினருக்கும் பாஜக கட்சியில் இடம் தரவில்லை.
இது கர்நாடகாவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் ராஜ்நாத் சிங் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், வெற்றிபெற கூடிய ஆட்களை மட்டுமே வேட்பாளர்களாக அறிவித்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது தேர்தல் சமயத்தில் எல்லோருக்கும் புரியும் என்றுள்ளார். இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.