Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » இலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையே மே முதல் தடையற்ற வர்த்தகம்.

இலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையே மே முதல் தடையற்ற வர்த்தகம்.

இலங்கை அரசு சிங்கபூர் உடனான தடையற்ற வர்த்தக உறவை உறுதிசெய்தது, இது வரும் மே மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. சிங்கப்பூரைத் தவிர வேறு எந்த நாட்டுடனும் இலங்கை இதுவரை இது போன்ற உடன்பாட்டைச் செய்து கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

👤 Saravana Rajendran20 April 2018 2:28 PM GMT
இலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையே  மே முதல் தடையற்ற வர்த்தகம்.
Share Post

சிங்கப்பூர் - இலங்கை தடையற்ற வர்த்த உடன்பாடு வரும் மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இலங்கை சிங்கபூர் இடையேயான தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை 2016ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கியது. இந்த ஆண்டு ஜனவரியில் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. வர்த்தகச் சேவைகள், மின்-வர்த்தகம், தொலைத்தொடர்பு, முதலீடு, மதிநுட்பச் சொத்து, அரசாங்கக் கொள்முதல் போன்ற துறைகள் உடன்பாட்டில் அடங்கும். இந்த உடன்படிக்கை பல நன்மைகளுக்கு வழிவகுக்கிறது.
உடன்பாடு முழுமையாக நடப்புக்கு வரும்போது, 80 விழுக்காட்டுச் சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு இலங்கையில் வரி விலக்குக் கிடைக்கும். இலங்கை அரசாங்கத்தின் ஒப்பந்தங்களுக்கு சிங்கப்பூர் நிறுவனங்கள் விண்ணப்பிக்கவும் அது வகை செய்கிறது. சிங்கப்பூர் - இலங்கை தடையற்ற வர்த்தக உடன்பாடு பல்வேறு இடைத்தரகர் மூலம் நடத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இலங்கைக்கு கிடைக்கும் முதலீடுகளுக்கும் சிறந்த பாதுகாப்பளிக்கிறது