Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » இதிலும் பாஜக முதலிடம்...!

இதிலும் பாஜக முதலிடம்...!

இந்தியாவில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது பதிவாகியுள்ள பெண்களுக்கு எதிரான வழக்குகளில், பா.ஜ.க முதல் இடம் பிடித்துள்ளது.

👤 Saravana Rajendran21 April 2018 11:37 AM GMT
இதிலும்  பாஜக முதலிடம்...!
Share Post

பெண்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகளில் பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய தேர்தல் கணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் புள்ளி விவரங்களைத் தேசிய தேர்தல் கணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பினர் ஆராய்ந்து வருகின்றனர். இது குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் 4,845 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வேட்புமனு தாக்க்ளின்போது அளித்த பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 1580 பேர் மீது கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் 48 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதன் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முதல் இடத்தில் இருப்பது பாஜகவைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் மற்றும் 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
7 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் சிவசேனா கட்சியும், மூன்றாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், நான்காவது இடத்தில் தெலுங்கு தேசம் கட்சியும், ஐந்தாவது இடத்தில் காங்கிரசும் உள்ளன. தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது 2 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.