Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மெக்கா மசூதி வெடிகுண்டு வெடிப்பு

மெக்கா மசூதி வெடிகுண்டு வெடிப்பு

மெக்கா மசூதி வெடிகுண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு தேசிய புலனாய்வுத் துறை மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது

👤 Saravana Rajendran24 April 2018 3:35 PM GMT
மெக்கா மசூதி வெடிகுண்டு வெடிப்பு
Share Post

மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப் பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும் விதமே, இந்திய ஜனநாயக நாட்டில் குற்றச் செயல்களுக்கான நீதி வழங்குவதற்கான நடைமுறை என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகத்தை, அதிகப்படுத்தவே செய்கிறது. அரசியல் ரீதியாக உணர்ச்சிப் பூர்வமான வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறை, தேசிய புலனாய்வுத் துறை போன்ற தேர்ந்து எடுக்கப்பட்ட உயர் விசாரணை அமைப்பு களும், அவற்றின் சிறந்த பயிற்சி பெற்ற காவல் துறை அதிகாரிகளும், நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ள இயன்ற சாட்சியங்களைத் திரட்டித் தரத் தவறிவிட்டனர்.
இந்த அமைப்புகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிகளின் வண்ணங்களைப் பார்த்து, அதற்கு ஏற்றபடியே செயலாற்றுகின்றன. அண்டை நாடான பாகிஸ்தானில் நிலவுவது போன்றதொரு சூழ்நிலையில் இருந்து இது எந்த அளவில் மாறுபட்டிருக்கிறது? சில குறிப்பிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர் புடைய குற்றவாளிகளுக்கு எதிராக, நீதிமன்ற விசார ணையையும் எதிர்த்து நிற்க இயன்ற சாட்சியங்களைத் திரட்டி அளித்திருப்பது என்பது அந்நாட்டு காவல் துறைக்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
அய்தராபாத் நகரில் உள்ள புகழ் பெற்ற மெக்கா மசூதியில் 2007 மே 18 வெள்ளிக் கிழமை அன்று தொழுகை நடந்து கொண்டிருந்தபோது நடைபெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்; 58 பேர் காயமடைந்தனர். தேசிய புலனாய்வுத் துறையால் தொடுக்கப்பட்ட இந்த குற்றவியல் வழக்கினை விசா ரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கடந்த திங்கட்கிழமையன்று தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட அய்ந்து பேரில் எவர் மீதும் குற்றத்தை மெய்ப்பிப்பதற்கான நம்பத் தகுந்த சாட்சியத்தை பிராசிகியூஷன் தரப்பு அளிக்க வில்லை என்று கூறி அவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து நீதிபதி விடுவித்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சுதந்திரமாக சென்றுவிட்டனர். சதித் திட்டத்தை மெய்ப்பிப்பதற்கும் கூட சாட்சியங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
காவியுடை அணிந்த சுவாமி அசீமானந்த் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பழைய தீவிர ஆதரவாளர், டில்லி நீதிமன்றம் ஒன்றில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, அளித்த ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த ஒட்டு மொத்த வழக்கும் தொங்கிக் கொண்டிருந்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் தனது ஒப்புதல் வாக்கு மூலத்தை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். எனவே, இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்துவிடுவது சிறப்பு நீதிபதிக்கு எளிதாகவே இருந்தது.
இந்த வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு மேல்முறையீடு செய்யும் என்று கருதுவதற்கு இட மில்லை. இந்த மெக்கா மசூதி வழக்கும் - வலதுசாரி இந்து தீவிரவாத அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்பட்ட முந்தைய ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கு (2007), சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு (2007), 2008 இல் நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பு ஆகிய வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக் கப்பட்டது போலவே, இந்த மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது. இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் இந்த அசீமானந்த் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
இந்த வழக்குகளில் சில நேரங்களில் தண்டனை வழங்கப்பட்டிருந்த போதிலும், தண்டனை வழங்கப் பட்டவர் அனைவரும் இந்த அமைப்புகளின் முக்கிய மற்ற சில உறுப்பினர்கள்தானே அன்றி, இந்து தீவிரவாத அமைப்புகள் என்று அழைக்கப்படும் அமைப்புகளின் மதிப்பு மிகுந்தவர்கள் என்று உயர்வாகக் கருதக்கூடிய எவரும் இந்த வழக்குகளில் தொடப்படவே இல்லை. அவர்கள் மீதான வழக்கு விசாரணை அதிகாரிகளால் திட்டமிட்டு குளறுபடி செய்யப்பட்டது.
மாலேகான் குண்டு வெடிப்பில் சிறப்பு பப்ளிக் பிராசிகியூட்டராக 2015 இல் மும்பை வழக்குரைஞர் ரோஹிணி சாலியன் நியமிக்கப்பட்டபோது ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டு வெளியானது. டில்லி தேசிய புலனாய்வு அமைப்பில் இருந்து யாரோ ஒருவர் மாலேகான் வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மென்மையாக நடந்து கொள் ளும்படி தன்னை வலியுறுத்தியதாக வெளிப்படையாக அவர் தெரிவித்தார்.
அவர்கள் கடைப்பிடிக்கும் சாதாரணமான தந்திரமே பிறழ் சாட்சியங்கள்தான். மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சியம் அளித்த, குற்றம் சாட்டப்பட்ட லெப். கலோனியல் சிறீகாந்த் புரோகித் உள்ளிட்ட 64 சாட்சியங்களும் வலதுசாரி இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்டனர். முக்கிய சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறுவதற்கு விசாரணை அதிகாரிகள் ஊக்கம் அளித்துள்ளனர் என்ற சந்தேகம் எழுவது தவிர்க்கப்பட இயலாததாக இருக்கிறது. காவல் துறை அதிகாரிகள் நேர்மையாக விசாரணை நடத்துவதையும், சாட்சியங்கள் பிறழாமல் சாட்சியம் அளிப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சட்டத்தை பலப்படுத்துவது மிகமிக அவசியமானதாகும்.