Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கொரிய தீபகற்பத்தின் இரண்டு நாடுகளின் சந்திப்பில் வெளிப்படைத்தன்மை தேவை என்று போப்பாண்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தின் இரண்டு நாடுகளின் சந்திப்பில் வெளிப்படைத்தன்மை தேவை என்று போப்பாண்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மற்றும் தென் கொரிய அரசியல் மட்டப்பேச்சுவார்த்தையின் போது இரண்டு நாட்டு தலைவர்களும் உலக அமைதியையும் மேம்படுத்தும் வண்ணம், விட்டுக்கொடுத்து துணிச்சலுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் போப்பாண்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

👤 Saravana Rajendran25 April 2018 5:48 PM GMT
Share Post

வெளிப்படையான கலந்துரையாடலைத் தொடங்க நல் வாய்ப்பாக இது அமையலாம்; அமைதியை உறுதிசெய்து, சகோதரத்துவத்தை மீட்டெடுக்கவும் அது வகைசெய்யலாம். அதன்வழி, கொரியத் தீபகற்பத்திலும், உலகம் முழுவதிலும், அமைதியை நிலைநாட்ட முடியும் என்று போப் குறிப்பிட்டார்.
வாட்டிகனில் பல்லாயிரம் பேருக்கு முன்னிலையில் ஆற்றிய வாராந்திர உரையில் போப் இவ்வாறு கூறினார். இருநாட்டுத் தலைவர்களும், நம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றின் துணைகொண்டு, அமைதியை உருவாக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.