Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » திருமணப் பரிசுப் பொருளில் வெடிகுண்டு வைத்த முன்னாள் கல்லூரி முதல்வர் கைது

திருமணப் பரிசுப் பொருளில் வெடிகுண்டு வைத்த முன்னாள் கல்லூரி முதல்வர் கைது

திருமணப் பரிசுப்பொருளினுள் வெடிகுண்டை மறைத்துவைத்து இரண்டுபேரை கொலை செய்த கல்லூரி பேராசிரியரை ஒரிசா காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்

👤 Saravana Rajendran26 April 2018 3:05 PM GMT
Share Post

ஒரிசாலின் பலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் (26 வயது) சவுமியா சேகர் சாகுவிற்கும் ரீமா என்பவருக்கு 2018 பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது, திருமணத்திற்கு பிறகு தனக்கு பரிசாக வந்தவற்றை சாகு மற்றும் அவரது புதுமனைவி ரீமா பிரித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது குண்டு வெடித்து. புதுமாப்பிள்ளை சாகுவும் அவருடைய பாட்டியும் மரணடைந்தனர்.
புதுமணப் பெண் ரீமா பலத்த காயமுற்றார்.
நீண்ட நாட்களாக இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளிகுறித்து விசாரணை செய்துவந்த ஒரிசா காவல்துறையினர் சாகுவின் தாயார் பணிபுரியும் கல்லூரியில் பணிபுரிந்த புன்ஜிலால் மெகர் என்பவரை கைதுசெய்தனர்.
இக்குண்டு வெடிப்பு தொடர்பாக கைதான புஜிலால் மெகர் சாகுவின் தாயார் பணிபுரியும் கல்லூரியின் முதல்வராக இருந்தார். பணிமூப்பு அடிப்படையில் இவரை முதல்வர் பதவியில் இருந்து விலக்கி சாகுவின் தாயாரை முதல்வர் ஆக்கினார்கள். இதில் சாகுவின் தாயாருக்கும் புன்ஜிலாலுக்கு முன்விரோதம் இருந்துவந்தது, இந்த நிலையில் சாகுவின் தாயாரை வஞ்சம் தீர்ப்பதற்காகப் பரிசுப் பொருளாகக் வெடி குண்டு அனுப்பும் திட்டத்தைத் தீட்டினார்.