Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » காவிரி விவகாரம் மேலும் இரண்டுவாரம் அவகாசம் வேண்டுமாம்

காவிரி விவகாரம் மேலும் இரண்டுவாரம் அவகாசம் வேண்டுமாம்

காவிரி தொடர்பான செயல் திட்டத்தை சமர்பிக்க மேலும் 2 வாரகால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

👤 Saravana Rajendran27 April 2018 3:59 PM GMT
Share Post

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை 6 வார காலத்துக்குள் செயல்படுத்தத் தவறிய மத்திய அரசு, கால அவகாசம் முடியும் நிலையில், ஸ்கீம் என்றால் என்ன என்று கேட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 3-ம் தேதிக்குள், காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் வரைவு திட்டம் இன்னும் தயாராகாததால், மேலும் 2 வாரகால அவகாசம் கோரி மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனு வரும் மே 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மே 3-ம் தேதி காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உறுதியாக தெரிவித்திருந்த நிலையில், மேலும் 2 வாரகால அவகாசம் கோரப்பட்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.