Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கோவில்கள் கொள்ளைக்கூட்டத்தாரின் கூடாரம் என்பது உண்மைதான் சிங்கபூர் கோவிலிலும் நிதிமுறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது

கோவில்கள் கொள்ளைக்கூட்டத்தாரின் கூடாரம் என்பது உண்மைதான் சிங்கபூர் கோவிலிலும் நிதிமுறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது

சிங்கபூர் சிராங்கூன் சாலையிலுள்ள வீரமாகாளியம்மன் கோயிலில், கடுமையான நிர்வாகச் சீர்கேடு நடந்திருப்பதாக சிங்கபூர் தொண்டு நிறுவனங்களுக்கான நிதிக்கண்காணிப்பு ஆணையர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

👤 Saravana Rajendran10 May 2018 5:02 PM GMT
கோவில்கள் கொள்ளைக்கூட்டத்தாரின் கூடாரம் என்பது உண்மைதான் சிங்கபூர் கோவிலிலும் நிதிமுறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது
Share Post

சிங்கபூர் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரையிலான காலகட்ட கோவில் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள்நடைபெற்று இருந்தது தெரியவந்தது.
முந்தைய கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் ஆர். செல்வராஜூ, அறங்காவலரும், தற்போதைய நிர்வாகக் குழுத் தலைவருமான சிவகடாட்சம், அறங்காவலரும் தற்போதைய நிர்வாகக் குழுச் செயலாளருமான ராதாகிருஷ்ணன் செல்வகுமார்-ஆகிய மூவருக்கும் இந்த நிதிமுறைகேட்டில் தொடர்பிருப்பதாக வும் அவர்கள் அவர்கள் சுயலாபத்திறகாக இந்த முறைகேடுகளை பொதுவெளியில் இருந்து மறைத்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
ஆலய நிதியும் சொத்துகளும், இவர்களாலும் இதர கோவில் நிர்வாகிகளாலும் வரம்பு மீறி கையாளப்பட்டிருப்பதாகவும் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
ஆலய உண்டியலில் பணத்தைச் செலுத்தாமல் குருக்கள் கையில் கொடுக்கச் சொல்வது, செக்குகள் கோவில் பெயரிடாமல் தருவது போன்ற நிகழ்வுகள் மற்றும் இப்படி கொடுக்கப்பட்ட காசோலைகளை அவர்கள் தங்களது பெயருக்கு மாற்றி அதை காசாக்கியதும் தெரியவந்துள்ளது.
சுமார் ஒன்றரை மில்லியன் வெள்ளி மதிப்புள்ள காசோலைகள் இவ்வாறு முறைகேடாக மாற்றப்பட்டதாக அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, இது தொடர்பான மேல் விசாரணைகள் நடந்துவருகிறது, இதன் மூலம் கோவில் நிர்வாகிகள் அனைவரும் கைதாகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
சிங்கபூர் சட்டப்படி நிதி முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இதன் படி கசையடியுடன் கூடிய நீண்ட கால சிறைதண்டனை கோவில் குருக்கள் முதல் கோவில் நிர்வாகிகள் அனைவருக்கும் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.