Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » காங்கோவில் ஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி

காங்கோவில் ஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி

ஏரியின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்தது

👤 Sivasankaran4 Aug 2021 3:03 PM GMT
காங்கோவில் ஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி
Share Post

காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டாங்கன்யிகா மாகாணத்தில் டாங்கன்யிகா ஏரியில் 80-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றது.

ஏரியின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிறுவர்கள் 7 பேர் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 76 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.