Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஹெலிகாப்டர் விபத்து - 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஹெலிகாப்டர் விபத்து - 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதின் பின்னணி குறித்து உடனடியாக தெரியவரவில்லை.

👤 Sivasankaran25 Jun 2021 1:36 PM GMT
ஹெலிகாப்டர் விபத்து - 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
Share Post

23 கென்ய ராணுவ வீரர்கள், வழக்கமான பயிற்சிக்காக ஒரு ஹெலிகாப்டரில் தலைநகர் நைரோபியில் இருந்து நேற்று புறப்பட்டனர். இந்த ஹெலிகாப்டர், நைரோபியின் புறநகரில் காலை சுமார் 8 மணிக்கு பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த 17 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதின் பின்னணி குறித்து உடனடியாக தெரியவரவில்லை.