Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மெக்சிகோவில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து 23 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து 23 பேர் உயிரிழப்பு

மெட்ரோ ரெயிலின் சில பெட்டிகள் சாலையில் விழுந்தன.

👤 Sivasankaran5 May 2021 2:11 PM GMT
மெக்சிகோவில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து  23 பேர் உயிரிழப்பு
Share Post

நேற்று முன்தினம் இரவு மெக்சிகோ சிட்டியின் தெற்குப் பகுதியில் உள்ள ஒலிவோஸ் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்த போது மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து விழுந்தது.

அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த மெட்ரோ ரெயிலின் சில பெட்டிகள் சாலையில் விழுந்தன.

இடிபாடுகளில் இருந்து 23 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

70-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.