Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ரஷிய மருத்துவமனையில் தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

ரஷிய மருத்துவமனையில் தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

நேற்று அதிகாலை இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பிடித்தது.

👤 Sivasankaran10 Jun 2021 11:43 AM GMT
ரஷிய மருத்துவமனையில் தீ விபத்தில்  3 பேர்  உயிரிழப்பு
Share Post

ரஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள ரியாசான் நகரில் மிகப் பெரிய மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.

நேற்று அதிகாலை இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பிடித்தது.

தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயின் கோரப்பிடியில் சிக்கி நோயாளிகள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.