Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » பிரான்சில் அகதிகள் மீது ரெயில் ஏறியதில் 3 பேர் உயிரிழப்பு

பிரான்சில் அகதிகள் மீது ரெயில் ஏறியதில் 3 பேர் உயிரிழப்பு

அதிகாலை 6 மணிக்கு இந்த தண்டவாளத்தில் ரெயில் வந்தது.

👤 Sivasankaran13 Oct 2021 5:08 PM GMT
பிரான்சில் அகதிகள் மீது ரெயில் ஏறியதில் 3 பேர் உயிரிழப்பு
Share Post

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர் அங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 6 மணிக்கு இந்த தண்டவாளத்தில் ரெயில் வந்தது. அப்போது தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகளை ரெயில் ஓட்டுநர் கவனிக்காததால் அவர்கள் மீது ரெயில் ஏறியது.

இந்த கோர சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒரு அகதிக்கு கால் உடைந்தது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.