Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » எகிப்தில் தேள் கொட்டி 3 பேர் பலி

எகிப்தில் தேள் கொட்டி 3 பேர் பலி

ஆலங்கட்டி மழை மற்றும் தூசிப் புயல்கள், தேள் மற்றும் பாம்புகளை தரையில் இருந்து வெளியேற்றியது.

👤 Sivasankaran15 Nov 2021 2:17 PM GMT
எகிப்தில் தேள் கொட்டி 3 பேர் பலி
Share Post

எகிப்து நாட்டில் நைல் நதிக்கு அருகில் பலத்த மழை, ஆலங்கட்டி மழை மற்றும் தூசிப் புயல்கள், தேள் மற்றும் பாம்புகளை தரையில் இருந்து வெளியேற்றியது.

இதுவரை 500-க்கும் மேற்பட்டோரைத் தேள் கடித்து விட்டதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி கலித் அப்தெல் கபார் (Khalid Abdel-Ghafar) தெரிவித்துள்ளார். அவர்கள் தற்போது சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி வருவதாகவும் அவர் கூறினார்.

தேள்கள் கடித்து 3 பேர் உயிரிழந்து இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.