Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 7 பேர் பலி

இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 7 பேர் பலி

ஒரு கர்ப்பிணி உட்பட 4 பெண்களும், 3 ஆண்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

👤 Sivasankaran1 July 2021 2:54 PM GMT
இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 7 பேர் பலி
Share Post

இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே நேற்றுமுன்தினம் இரவு அகதிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த படகில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரிகிறது.

லம்பேடுசா தீவிலிருந்து 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் சென்று கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்தது.

ஒரு கர்ப்பிணி உட்பட 4 பெண்களும், 3 ஆண்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

46 பேரை மீட்புக்குழுவினர் மீட்டனர். இந்த விபத்தில் மேலும் 9 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.