Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

புதிய கலிடோனியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran11 Feb 2021 1:26 PM GMT
ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு
Share Post

ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசிபிக் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து, வணூட்டு, புதிய கலிடோனியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைவாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது.