Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடி தடங்கள் கண்டுபிடிப்பு

23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடி தடங்கள் கண்டுபிடிப்பு

நியூமெக்சிகோ மாகாணத்தில் நடந்து வரும் தொல்பொருள் ஆய்வின்போது, ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்தனர்.

👤 Sivasankaran25 Sep 2021 2:45 PM GMT
23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடி தடங்கள் கண்டுபிடிப்பு
Share Post

அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள நியூமெக்சிகோ மாகாணத்தில் நடந்து வரும் தொல்பொருள் ஆய்வின்போது, ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்தனர்.

வெள்ளை மணல் தேசிய பூங்காவில் உள்ள ஒரு வறண்ட ஏரிக்கரையில் இந்த புதைபடிவ காலடி தடங்கள் கண்டறியப்பட்டதாகவும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் காலடி தடங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.