Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » 4 ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா மருந்துக்கான தடை நீக்கம்

4 ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா மருந்துக்கான தடை நீக்கம்

ஜெர்மனியிலும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.

👤 Sivasankaran19 March 2021 7:41 AM GMT
4 ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா மருந்துக்கான தடை நீக்கம்
Share Post

அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பு மருந்துக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை பிரான்ஸ் உள்ளிட்ட 4 ஐரோப்பிய நாடுகளில் நீக்கியுள்ளன.

ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த தடுப்பூசியை மீண்டும் மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.

ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளில் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெளிவாகியிருப்பதால், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.