Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » 4 ஆண்டுகளில் கல்வி அறிவு இல்லாதவர்கள் வாழும் நாட்டில் முதலிடம் பிடிக்கும் இந்தியா?

4 ஆண்டுகளில் கல்வி அறிவு இல்லாதவர்கள் வாழும் நாட்டில் முதலிடம் பிடிக்கும் இந்தியா?

8ஆம் வகுப்பு வரை காட்டாய தேர்ச்சிமுறை ரத்து, கல்வி வியாபாரம், தேர்வெழுதுபவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவது போன்ற நிகழ்வுகளால் இந்தியா இன்னும் 4 ஆண்டுகளுக்குள் கல்வியறிவு இல்லாதவர்கள் வாழும் நாடுகளில் முதலிடம் பெறும் அபாயம் உள்ளது

👤 Saravana Rajendran14 Feb 2018 4:04 AM GMT
4 ஆண்டுகளில் கல்வி அறிவு இல்லாதவர்கள் வாழும் நாட்டில் முதலிடம் பிடிக்கும் இந்தியா?
Share Post

பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் நடைமுறையை மறு ஆய்வு செய்யுமாறு பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு கூறியுள்ளது.

தற்போது பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பலத்த எதிர்ப்பிற்கு இடையில் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இச்சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறகு அந்த மசோதா மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதற்கு பாஜக எம்.பி. சத்தியநாராயணன் ஜாட்டியா தலைமை வகித்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தனது ஆய்வறிக்கையை அக்குழு சமர்ப்பித்துள்ளது. திங்களன்று வெளியான அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்று ஆறு மாநிலங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளன. மற்ற மாநிலங்கள் அனைத்தும் அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. அதன் அடிப்படையில் பார்க்கும்போது கட்டாயத் தேர்ச்சி முறையை மாற்றியமைப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆண்டுதோறும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி அவர்களது திறனை மதிப்பிடுவது அவசியம். அதில் தோல்வியடைபவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கலாம். அதன் மூலம் அவர்கள் கல்வியறிவு செழுமையடையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு ஸ்டெடி இன் இந்தியா என்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவரை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 25 நாடுகளை மையமாக கொண்டு ரூ. 300 கோடிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக அண்டை நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா கண்டத்தை குறிவைக்கப்பட்டுள்ளது. அரச கணக்கெடுப்பின் படி தற்போது 35 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் இந்திய கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.

இந்தியாவில் உயர் தரமான மற்றும் சவுகர்யமான கட்டணத்தில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது என்பதை வெளி உலகிற்கு எடுத்து காட்டுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் செயல்படுத்தப்படவுள்ளது. ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட 115 உயர் கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளது.

இந்த ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் 10-லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவில்லை, இதில் பெரும்பாலான மாணவர்கள் ஏழைகள், கிராமப்புற மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினத்து மாணவர்கள் ஆவார்கள். தற்போது உத்திரப்பிரதேசத்தில் மக்கள் தொகையில் 22 விழுக்காடு எழுத்தறிவில்லாதவர்களாக உள்ளனர். 32 பேர் ஆரம்பக்கல்வியிலேயே படிப்பை நிறுத்தியவர்கள். ஆண்டுதோறும் குறைந்துவரும் தேர்ச்சி விகிதம், படிப்பை பாதியில் நிறுத்துபவர்களால் உத்திரப்பிரதேசம் காடுமிராண்டிகளின் மாநிலமாக மாறிக்கொண்டு வருகிறது,

இந்த நிலையில் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை எடுத்துவிட்டால் இன்னும் 4 ஆண்டுகளில் இந்தியாவே கல்வியறிவில்லாத பாதியிலேயே கல்வியை கைவிடும் நாடுகளில் முதலிடம் பெற்றுவிடும்.

பணக்காரர்களின் பிள்ளைகள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உருவாகிவிடும்