Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » #gobackmodi தமிழகம் வரும் மோடியே வெளியே போ என்று ஹாஷ்டேக் உலக அளவில் பிரபலமாகிவிட்டது,

#gobackmodi தமிழகம் வரும் மோடியே வெளியே போ என்று ஹாஷ்டேக் உலக அளவில் பிரபலமாகிவிட்டது,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, ஆனால் தமிழர்களின்...

👤 Saravana Rajendran12 April 2018 6:41 AM GMT
#gobackmodi    தமிழகம் வரும் மோடியே வெளியே போ என்று ஹாஷ்டேக் உலக அளவில் பிரபலமாகிவிட்டது,
Share Post

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, ஆனால் தமிழர்களின் உணர்வை எள்ளளவும் மதிக்காமல் அய்பிஎல் போட்டியை நடத்தியே தீருவேன் என்று இறுமாப்புடன் இருப்பதும், இந்த எதிர்ப்பிலும் ராணுவக் கண்காட்சிக்கு வருகைதந்து தமிழர்களின் அடிப்படை உணர்வைக்கூட மதிக்காமல் நடந்துகொள்வதும் தமிழர்களிடையே கடுமையான எதிர்ப்பை கிளப்பியுள்ளது,
எல்லா மக்களும் தங்கள் தளத்தில் இருந்து தங்களால் ஆன போராட்டங்களை மேலெடுத்துவருகின்றனர். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் #gobackmodi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் அதிகமான நபர்களால் பகிரப்பட்டு பேசும் பொருளாக மாறியுள்ளது,
ஹேஷ் டேக் என்றால் என்ன?
ஹேஷ் டேக் என்பதும் ஒரு போராட்ட கவன ஈர்ப்பு அடையாளமாகும் தங்களுக்கான செய்தியை உலகத்திற்குச் சொல்ல ஹேஷ் # என்ற குறியீட்டை முன்னாள் இட்டு அதன் பின்ன தங்கள் என்னத்தை ஒரு வார்த்தையில் எழுதிவிடலாம், இணைய தளத்தில் பதிவிடும் இந்த வார்த்தையை யார் திறந்தாலும் அதில் தமிழகத்தின் மோடி எதிர்ப்பு குறித்த செய்திகள் மட்டுமே வரும்.
முக்கியமாக தற்போது தமிழகத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது இந்தியா குறித்து இணையத்தில் உலக அளவில் தேடும் போது முதல் முதலாக #gobackmodi என்ற தமிழகத்தின் எதிர்ப்பு தகவல் தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது

Tags