Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கொழும்பு வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்

கொழும்பு வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்

கொழும்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் இராணுவத்தினருக்கு மேலதிகமாக...

👤 Sivasankaran26 Feb 2020 3:04 PM GMT
கொழும்பு வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்
Share Post

கொழும்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் இராணுவத்தினருக்கு மேலதிகமாக விமானப்படையினரை இணைத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட, வெள்ளவத்தை, நாடாளுமன்ற சுற்றுவட்ட வீதி உட்பட பல வீதிகளில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களிலும் மேலும் முப்படையை சேர்ந்த பலர் கடமையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இராணுவ சைக்கிள் குழுவினர் கொழும்பின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து நடவடிக்கைக்காக 150 இற்கும் அதிகமான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் சிலரும் இதற்காக ஈடுபடுப்பபட்டுள்ளதாக இராணுவத் -தளபதி குறிப்பிட்டுள்ளார்.