அஜித் நடித்துள்ள விஸ்வாசம் ஜனவரி 10ம் திகதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான டிரெய்லரில் இருந்தே ரசிகர்கள் கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டனர். யூடியூபில் 18 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது விஸ்வாசம் டிரெய்லர்.
இப்படத்தின் கலை இயக்குநர் மிலன் விஸ்வாசத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறுகையில், "விஸ்வாசத்தில் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான மற்றும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது. இயக்குமர் சிவா இங்கு வித்தியாசமான ஒன்றை முயற்சித்ததாக நான் கூறுவேன். போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் காட்சி விளம்பரங்களில் என் கலை அமைப்பு மிகவும் வண்ணமயமாக இருந்ததாக அனைவரும் பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கிய படைப்பு சுதந்திரம் தான் இத்தனைக்கும் காரணமாக இருந்தது என்பதை நான் ஒப்புகொள்கிறேன். நிச்சயமாக, ஒளிப்பதிவாளர் வெற்றியின் மாயாஜாலம் இல்லாமல் இது சாத்தியமில்லை. படம் வெளி வரும் போது குடும்பம் குடும்பமாகவிஸ்வாசம் அஜித்தை ரசிப்பார்கள் என்றார் மகிழ்ச்சியுடன்".