Home » கேளிக்கை » டாப்சியின் வருத்தம் - ஆறுதல் கூறிய ரசிகர்கள்

டாப்சியின் வருத்தம் - ஆறுதல் கூறிய ரசிகர்கள்

எனக்கு அந்த பேட்டியில் பங்கேற்கும் தகுதி இன்னும் வரவில்லை. அதற்கான தகுதிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

👤 Sivasankaran9 March 2019 3:34 PM GMT
டாப்சியின் வருத்தம் - ஆறுதல் கூறிய ரசிகர்கள்
Share Post

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் டாப்சி நடித்த படம் பிங்க். இந்த படத்தை தான் தமிழில் அஜித் அமிதாப் வேடத்தில் நடிக்க நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

பிங்க் என்ற இந்தி படத்தில் நடித்தவர்களை பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாடினார்கள். ஆனால், இதில் நடித்த டாப்சியை மட்டும் அவர்கள் அழைக்கவில்லை. பேட்டியை கண்ட ரசிகர்கள் டாப்சியிடம் இதுபற்றி விசாரிக்க தொடங்கினார்கள். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நீங்கள் பேட்டியில் இல்லையே ஏன்? என்று கேட்டார்கள். உடன் டாப்சி வருத்தமானார்.

உடன் சிரித்தபடியே, 'நல்ல கேள்வி... "எனக்கு அந்த பேட்டியில் பங்கேற்கும் தகுதி இன்னும் வரவில்லை. அதற்கான தகுதிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று விரக்தியாக பதில் அளித்தார்.

இந்த பதிலை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், உங்களுக்கு எல்லா தகுதியும் உண்டு, நீங்கள் புத்திசாலி தான் என்று ஆறுதலாக பேசினார்கள். இதைக் கேட்ட டாப்சி எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்றார்.