Home » கேளிக்கை » எனது கனவுகள் இப்போது நிஜமாகிறது - ஸ்ரீரெட்டி

எனது கனவுகள் இப்போது நிஜமாகிறது - ஸ்ரீரெட்டி

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் உண்மையான ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார்.

👤 Sivasankaran22 April 2019 4:20 PM GMT
எனது கனவுகள் இப்போது நிஜமாகிறது - ஸ்ரீரெட்டி
Share Post

பட வாய்ப்புகள் தர படுக்கைக்கு அழைத்தனர் என்று பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.

ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை 'ரெட்டி டைரி' என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உண்மை சம்பவங்களை படத்தில் கொண்டு வருவதால் பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர்களும், இயக்குனர்களும் கலக்கத்தில் உள்ளனர். படத்தினை தடுக்கவும் ஈடுபட்டு வருகிறார்கள் என்கிறார்.

தெலுங்கு நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ராமமோகன்ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவை தெலுங்கானா அரசு அமைத்துள்ளது.

"எனது கனவுகள் இப்போது நிஜமாகி இருக்கிறது. சினிமாவில் கதாநாயகர்களாக தோன்றுபவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை. ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் உண்மையான ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். இதுவரை மோசமாக அழைக்கப்பட்டு வந்த நான் இந்த அறிவிப்பு மூலம் கதாநாயகி ஆகிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலியும், வேதனையும் இப்போது பறந்து விட்டது. எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என்கிறார் ஸ்ரீரெட்டி.