Home » கேளிக்கை » வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைத்தார்கள் - ரிச்சா

வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைத்தார்கள் - ரிச்சா

திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்க ஆர்வம் ஏற்பட்டது.

👤 Sivasankaran24 April 2019 12:14 PM GMT
வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைத்தார்கள் - ரிச்சா
Share Post

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிவரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போது இந்தி நடிகை ரிச்சா பாலியல் தொல்லையில் சிக்கியதாக தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ரிச்சா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நடிகையானார். அதிகமான பட வாய்ப்புகள் வந்த போதே திடீரென்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். சினிமாவை விட்டு விலகினார்.

"என் சினிமா வாழ்க்கை மோசமாக இருந்தது. நடிக்க வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் படுக்கைக்கு அழைத்தனர். இதனால்தான் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. எனவே மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடினேன்.

அப்போதும் என்னை படுக்கைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் சினிமா துறையே வேண்டாம் என்று முடிவு கட்டி, முழுமையாக ஒதுங்கி விட்டேன்" என்று ரிச்சா கூறினார்.