திரிஷா `1818', `பரமபதம் விளையாட்டு', ராங்கி, சிம்ரனுடன் ஆக்ஷன் அட்வஞ்சர் படம் என மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. திருஞானம் இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார்.
படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டிரைலர் திரிஷா பிறந்த நாளான நாளை (மே 4) வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.