Home » கேளிக்கை » எனது காதல் பற்றிய செய்திகள் வதந்தியே - ஐஸ்வர்யா ராஜேஷ்

எனது காதல் பற்றிய செய்திகள் வதந்தியே - ஐஸ்வர்யா ராஜேஷ்

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக இணைந்துள்ளார்.

👤 Sivasankaran11 May 2019 3:24 PM GMT
எனது காதல் பற்றிய செய்திகள் வதந்தியே - ஐஸ்வர்யா ராஜேஷ்
Share Post

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளுள் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் தனது காதலரை திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்தி பரவியது.

கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக இணைந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

திருமணம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் எனது காதல் கதை பற்றி வதந்திகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இப்படியான பொய் செய்திகளை பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்கு அதை சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் தனியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.