Home » கேளிக்கை » நேர்கொண்ட பார்வை படத்தில் வித்தியாசமான அஜித்தை பார்க்கலாம் - டைரக்டர் வினோத்

நேர்கொண்ட பார்வை படத்தில் வித்தியாசமான அஜித்தை பார்க்கலாம் - டைரக்டர் வினோத்

இது, எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும்.

👤 Sivasankaran14 Jun 2019 3:56 PM GMT
நேர்கொண்ட பார்வை படத்தில் வித்தியாசமான அஜித்தை பார்க்கலாம் - டைரக்டர் வினோத்
Share Post

வினோத் டைரக்‌ஷனில், போனிகபூர் தயாரித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தில் தல அற்புதமாக நடித்துள்ளாராம். படம் பற்றி கூறிய டைரக்டர் வினோத்,

"அஜித் ஸ்ரீதேவியிடம் கொடுத்த ஒரு வாக்குறுதிக்காக உருவாகியிருக்கும் படம், இது. ஸ்ரீதேவி உயிரோடு இருக்கும்போது, அவருக்காக ஒரு படம் நடித்து தருகிறேன் என்று அஜித் அளித்த வாக்குறுதியை மறக்காமல், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில், இந்த படத்தில் நடித்துக் கொடுத்து இருக்கிறார். இது, எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும்.

அஜித் நடிப்பு, இதுவரை பார்த்திராத அளவுக்கு இருக்கும். இதுவரை பார்த்திராத ஒரு அஜித்தை, இந்த படத்தில் பார்க்கலாம். அவருடன் நடிப்பு திறமையும், அழகும் மிகுந்த வித்யாபாலன், மனைவி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பொதுவாக பெண்களை ஆண்கள் எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்? என்பதே கதையின் கரு. படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள்.

இதில் அஜித்தின் நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும்" என்றும் கூறினார்.