Home » கேளிக்கை » கவர்ச்சியாக நடிக்க தயாராக உள்ளேன் - டாப்சி

கவர்ச்சியாக நடிக்க தயாராக உள்ளேன் - டாப்சி

2, 3 மணிநேரம் ஒதுக்கி எனது படங்களை பார்க்க வருகிறார்கள். அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.

👤 Sivasankaran16 Jun 2019 4:01 PM GMT
கவர்ச்சியாக நடிக்க தயாராக உள்ளேன் - டாப்சி
Share Post

டாப்சி தற்போது மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில்,

"ரசிகர்கள் 200 ரூபாய், 300 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து 2, 3 மணிநேரம் ஒதுக்கி எனது படங்களை பார்க்க வருகிறார்கள். அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களுக்காகவே நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.

நான் எப்போதும் டைரக்டருடைய கதாநாயகி. டைரக்டர்தான் முக்கியம். நாங்கள் அவர் கையில் இருக்கும் கருவிகள். என்னுடைய படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் சேரவில்லையே என்று பலர் கேட்கிறார்கள். ரூ.30, ரூ.40 கோடி வசூலித்தாலே எனக்கு திருப்திதான்.

கவர்ச்சியாகவும், முத்தக் காட்சிகளிலும் நடிக்க நான் தயார். அப்படி நடிக்க வைக்க இயக்குநர்கள் தயங்க வேண்டாம்.

தற்போது வரை திருமணம் பற்றிய எண்ணம் ஏதும் வரவில்லை. குழந்தைகள் வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அந்த ஆசை எப்போது தீவிரமாகிறதோ அப்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று சிரித்தபடி கூறினார்.