Home » கேளிக்கை » நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் - அனுஷ்கா

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் - அனுஷ்கா

கடும் உடற்பயிற்சிகள், உணவு கட்டுபாடு என்று எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டும் எந்த பலன் இல்லை. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன.

👤 Sivasankaran29 Jun 2019 4:56 PM GMT
நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் - அனுஷ்கா
Share Post

முன்னணி கதாநாயகியான அனுஷ்கா நடிப்பில் பாகுமதி படம் கடந்த வருடம் ஜனவரியில் திரைக்கு வந்தது. அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை.

'இஞ்சி இடுப்பழகி' படத்தில் உடல் எடையை கூட்டி நடித்து விட்டு பின்னர் உடம்பை குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். கடும் உடற்பயிற்சிகள், உணவு கட்டுபாடு என்று எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டும் எந்த பலன் இல்லை. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன. வெளிநாடு சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுத்து பழைய தோற்றத்துக்கு திரும்பினார்.

தற்போது மாதவன் ஜோடியாக 'சைலன்ட்' படத்தில் நடித்து வருகிறார். அமிதாப்பச்சன், சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்திலும் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்தபோது அனுஷ்கா உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததாகவும் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார்.

ரசிகர்கள் பலரும் அனுஷ்காவின் உடல்நிலை பற்றி வலைத்தளத்தில் விசாரித்தபடி இருக்கிறார்கள். அனுஷ்கா தனது டுவிட்டர் பக்கத்தில், "நான் உடல் நலத்தோடு ஆரோக்கியமாக இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.