Home » கேளிக்கை » கொலையுதிர் காலம் - படத்திற்கான தடை நீங்கியது

கொலையுதிர் காலம் - படத்திற்கான தடை நீங்கியது

கொலையுதிர்காலம் என்ற தலைப்புடன் படத்தினை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

👤 Sivasankaran30 Jun 2019 4:40 PM GMT
கொலையுதிர் காலம் - படத்திற்கான தடை நீங்கியது
Share Post

நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த படம் கடந்த மாதம் 14-ம் திகதி வெளியாக இருந்தது. கொலையுதிர்காலம் என்ற தலைப்புடன் படத்தினை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

இந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் கொலையுதிர்காலம் என்ற தலைப்பிற்கு எந்த காப்புரிமையும், யாரிடமும் இல்லை என்பதை ஆதாரத்துடன் எடுத்து வைத்து வாதாடினார்.

காப்புரிமை இல்லாத டைட்டிலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.