Home » கேளிக்கை » சினிமாவை விட்டு விலக எண்ணியிருந்தேன் - அமலாபால்

சினிமாவை விட்டு விலக எண்ணியிருந்தேன் - அமலாபால்

திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெறும் கதைகள் அனைத்தும் மிகவும் பொய்யானதாகவே இருக்கிறது

👤 Sivasankaran9 July 2019 4:17 PM GMT
சினிமாவை விட்டு விலக எண்ணியிருந்தேன் - அமலாபால்
Share Post

அமலா பால் 'ஆடை' படத்தில் நிர்வாண காட்சியில் நடித்து மிகவும் பரப்பாக பேசும் சூழ்நிலைக்கு வந்துவிட்டார். இந்த படத்தில் ஆடையின்றி நிர்வாணமாக நடித்தது பற்றி, ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குநர் ரத்னகுமார் நிர்வாண காட்சியில் நடிக்க சிறப்பு ஆடை அணிவது குறித்து விவாதித்ததாகவும் , நான் "அதைப் பற்றி கவலை வேண்டாம்" என்று அவரிடம் கூறிவிட்டதாக தெரிவித்தார்.

படப்பிடிப்பு நேரத்தில் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். காட்சி எடுப்பதாக இருந்த இடம் கிட்டத்தட்ட மூடப்பட்டு இருந்தது. செட்டில் 15 பேர் மட்டுமே இருந்தனர். படக்குழுவினரை நம்பவில்லையென்றால் நான் அந்த காட்சியில் நடித்திருக்கவே முடியாது என்று அமலா பால் கூறினார்.

ஆடை படத்திற்கு முன் நான் இந்த துறையை விட்டு விலகப்போகிறேன் என்று என்னுடைய மேனேஜரிடம் தெரிவித்திருந்தேன். ஏனென்றால் திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெறும் கதைகள் அனைத்தும் மிகவும் பொய்யானதாகவே இருக்கிறது என்றார் அமலாபால்.