Home » கேளிக்கை » தயவு செய்து படத்தை தியேட்டரில் பாருங்க - சந்தானம்

தயவு செய்து படத்தை தியேட்டரில் பாருங்க - சந்தானம்

படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.

👤 Sivasankaran23 July 2019 5:48 PM GMT
தயவு செய்து படத்தை தியேட்டரில் பாருங்க - சந்தானம்
Share Post

சர்க்கிள் பாக்ஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ஏ1. இப்படம் வரும் ஜூலை 26ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய சந்தானம், தில்லுக்கு துட்டு 2' படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு முதல் நன்றி. ஜான்சன் கதையைச் சொன்னதும் சரி பண்ணலாம் என்று சொன்னேன். 2000ம் ஆண்டு டீவில அறிமுகமான நான் இப்போ வரைக்கும் ஓரளவு தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான் என்று அவர்களை பாராட்டினார்.

து சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. என்னைச் சுற்றி அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய வேண்டுகோள் என்னன்னா படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு. ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு.

தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்" என்றார் சந்தானம்.