Home » கேளிக்கை » தன்னம்பிக்கை தான் அழகு - சாய் பல்லவி

தன்னம்பிக்கை தான் அழகு - சாய் பல்லவி

2 தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன.

👤 Sivasankaran4 Sep 2019 4:36 PM GMT
தன்னம்பிக்கை தான் அழகு - சாய் பல்லவி
Share Post

மலையாளத்தில் பிரேமம் என்ற ஒரு படத்திலேயே முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக பிரபலமான சாய்பல்லவி தமிழ், தெலுங்கில் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்போது 2 தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன.

சாய் பல்லவி அளித்த பேட்டியில், "மனிதனுக்கு அழகை கொடுப்பது தன்னம்பிக்கை. எனக்கு அது நிறைய இருக்கிறது.

முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டேன். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் எனது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை எப்படி கொள்ளையடிக்கும் என்றுதான் யோசிப்பேன். படத்தில் நடித்து திரைக்கு வந்த பிறகு வெற்றி பெற்றதா? அல்லது தோல்வி அடைந்ததா? என்று சிந்தித்துக் கொண்டு இருக்க மாட்டேன். படங்களில் நடிக்கும் முன்பு கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா என்று ஆலோசிப்பேன் என்று கூறினார்.