பார்த்திபன் இயக்கத்தில் உருவான 'ஒத்த செருப்பு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் குறித்து வந்த ஒரு சில விமர்சனங்களால் தான் வேதனை அடைந்துள்ளதாக பார்த்திபன் கூறியுள்ளார்.
'ஒத்த செருப்பு' படத்தை வெளியிட ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விமர்சனங்கள் எல்லாமே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு சிலர் மட்டும் கதையாக இது எனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக பதிவு பண்ணியிருந்தார்கள். அது ரொம்பவே வருத்தமான ஒரு விஷயம்.
என் குடும்பத்தில் எவ்வித பிரச்சினையும் இன்றி ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறோம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். என் இரண்டு பெண்களின் திருமணமும் அனைத்து குடும்பமும் இருந்து தான் நடந்தது. இப்போது போய் ஒரு படம் எடுத்து, யாரையோ சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. தேவையில்லாமல் ஒரு குழப்பத்தைச் சொல்லிக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்றும் கூறினார்.